பின்னர், திதி தான் செய்த காரியத்தின் தோஷத்தை நினைத்து பயமுற்று, காஷ்யபரை வணங்கி, கலங்கி நின்றாள். தனது கர்ப்ப ஷேமத்திற்கு வேண்டி பிரார்த்தித்தாள்.

காஷ்யபர் சொன்னார்.

" உனது புத்தி மோசத்தால் ஏற்பட்ட இந்த கர்ப்பத்தில், இரண்டு உபயோகமில்லாத புத்திரர்கள் பிறப்பார்கள். அசுர சுபாவத்துடன் நடந்து கொண்டு, எல்லோருக்கும் துன்பத்தை தந்து கொண்டு இருப்பார்கள். அவர்களை, பகவான் வராகமாகவும், நரசிம்மனாகவும் அவதாரம் செய்து, அழிப்பார்." என்றார்.

அதைக்கேட்ட திதி, "பகவான் மூலம் இறப்பு ஏற்பட்டால், சந்தோஷமே. உலகத்திலுள்ளவற்க்கு நம்மால் துக்கம் நேர
வேண்டாம். "

" மங்கையே ! நீ, தான் செய்த அபராதத்தால் மனக்கஷ்டம் அடைந்து, அனுதாபத்திற்கு ஆளானதால், பகவானின் ஆதரவு, உனக்கு ஏற்பட்டு, உன் புத்திரர்களில் ஒருவனின் புத்திரன் மூலம், உனது வாரிசு புகழடையும். பிரகலாதன் என்ற உன் பேரன் சுபாவத்தால் - தெய்வ பிரார்த்தனையால். - இந்த
உலகம் வாழ்த்தும்."

மைத்ரேயர் சொன்னார்: 'திதி தனக்கு ஒரு பேரன் மிகுந்த பகவத் பக்தியோடு இருப்பான் என்பதை கேட்டு, சந்தோஷம் அடைந்தாள். என்றாலும், தனது கணவர் மற்றும் பிறருக்கு இன்னலை கொடுக்கும் இந்த கர்ப்ப வீர்யத்தை, இந்திரன் உதவியால், நூறு வர்ஷம் கர்ப்பத்திலேயே வைத்திருந்தாள் . இதனால் உலகம் முழுவதும் இருண்டது. அனைவரும் பிரம்மதேவனை அணுகி பிரார்த்தித்தனர். "

" தேவமனுஷர்களுக்கு உருவம் பெறச் செய்கின்ற பிரம்மதேவனே ! யார் ஆத்மார்த்தமாய் , உம்மை பிரார்த்திக்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் நன்மையை செய்து கொடுத்து பாதுகாப்பது நீரே ! இந்த திதியின் கர்ப்பத்தின் மூலம் இருள் மூடிக் கிடக்கும் உலகை காப்பாற்றுங்கள் ! வரும் ஆபத்தை நீக்கி, அருள் புரியுங்கள் " என கோரினர்.

இது இப்படி இருக்க,

துளசியை ஆபரணமாக அணிந்து, சயன கோலத்தில் இருக்கும் பகவானை, அன்னை லட்சுமிதேவி, புஷ்ப துளசிகளால் பூஜித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த வைகுண்ட லோகத்தில், பகவானை தரிசனம் செய்ய விரும்பாதவர்கள் உலகில் இல்லை.

அந்த வைகுண்டவாசனை தரிசிக்க , இரு முனிவர்கள் வந்தனர். அவர்களே , சனகாதி முனிவர்கள் ஆவர்.

காதலியின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் காதலர் மனம் துள்ளுவது போல், பகவானின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் பக்தர் மனம் எழும்பிக் குதிக்கும்.

வைகுந்த வாசலை அடைந்து விட்ட ஸனகாதியரின் மனநிலையை எப்படிச் சொல்வது? அங்கிருக்கும் எந்த அற்புதப் பொருளின் மீதும் அவர்களது கவனம் செல்லவில்லை. ஓட்டமும் நடையுமாக, ஆனந்தக் கண்ணீரோடு, ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு ஆறு வாயில்களைக் கடந்து விட்டனர்.

ஏழாவது வாயில் அருகே வந்தாயிற்று..

ரத்தினங்கள் பதித்த தகதகக்கும் தங்க வாயில்..

ஆச்சு.. இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில் ..

இந்த வாசலைத் தாண்டினதும் பகவத் தரிசனம்..

ஆஹா.. நினைக்கும்போதே மேனி சிலிர்த்தது..

ஒரே ஓட்டம், தாண்டப் போனால், சட்டென்று குறுக்கே தங்கப் பிரம்புகள்.

ஒன்றும் புரியவில்லை. மீண்டும் போக முயற்சித்தால் மறுபடி தடுக்கப்பட்டனர்