- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்.
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.