தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்


* சிரிப்பதன் மூலம், மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் உற்பத்தி அளவு குறைகிறது.


* புகழ்பெற்ற `டைட்டானிக்' கப்பலை உருவாக்க சுமார் 70 லட்சம் டாலர்கள் செலவானது.

* நமது உடலில் 20 முதல் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே சிகரெட் லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

* அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் சுட்டுவிரல் நீளம், 8 அடி.

* தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தாயும், மனைவியும் காது கேளாதவர்கள்.

* ஆந்தை மட்டுமே தன்னுடைய மேல் இமையை விரிக்க முடியும். மற்ற பறவைகள் கீழ் இமையை மட்டுமே விரிக்க முடியும்.

* கடவுளின் பெயர் சூட்டப்படாத ஒரே கிரகம், பூமி.

* கண்களைத் திறந்து கொண்டே உங்களால் தும்ம முடியாது.

* பன்றிகளின் நாக்கில் சுமார் 15 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளன.

* கி.மு. 2737-ம் ஆண்டில் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது.

* நீண்ட காலம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஒரே உணவுப்பொருள், தேன்.

ஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால் சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா? தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறுபடுவதுதான் காரணம். சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலின் எடை, இடைப்பகுதியில் அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.

கலங்கரை விளக்கு ஒளி நீண்ட தொலைவு தெரிவதால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புகிறது. கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதால் மட்டும் அதன் ஒளி நீண்ட தூரம் தெரிவதில்லை. அதற்கு வேறு அறிவியல் காரணம் இருக்கிறது. கலங்கரை விளக்கில் ஒளிதரக்கூடிய விளக்கு ஒன்று குழி ஆடியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழி ஆடி ஒளிக்கதிரை இணைக்கற்றையாக எதிரொளிக்கிறது. இப்படிப்பட்ட இணைக் கற்றை ஒளிதான் நீண்டதூரம் சென்றாலும் திண்மை குறையாமல் செல்லும். அப்படி இருந்தால்தான் தூரத்தில் வரும் கப்பல்கள்வெளிச்சத்தை உணர முடியும். கலங்கரைவிளக்க ஒளி சுமார் 5 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.
                                                                                                                                      
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிறப்புக்குரிய கோபுரங்களை இடிமின்னலில் இருந்து காப்பவை கலசங்கள் தான். மின்னேற்றம் பெற்றுள்ள மேகங்கள் காற்றைக் கடக்கும்போது உராய்வினால் இடி-மின்னல் உருவாகிறது. கூர் முனையுடைய உலோகம் மின்னேற்றத்தை தன்பால் இழுத்து கடத்தும். இடி-மின்னல் ஏற்படும்போது உலோகத்தால் செய்யப்பட்ட கலசம் மின்சாரத்தை ஈர்க்கிறது. கலசத்தில் இருந்து தரைக்குள் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வழியாக அந்த மின்சாரம் கடத்தப்பட்டு பாதுகாப்பாக தரைக்குள் அனுப்பப்படுவதால் கோபுரங்கள் இடி தாக்குதலுக்கு பாதிக்கப்படுவதில்லை.

மனிதனின் கண்ணீரும், வியர்வையும் உப்புக்கரிக்கும். ஏனெனில் அவை உணர்வுப்பூர்வமானவை என்று இயல்பான விளக்கம் தரலாம். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? மனிதனின் தோற்பரப்பு சுமார் 18 சதுர அடி. இந்த தோற்பரப்பில் லட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் கழிவுப் பொருட்களான நீர், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் கழிவு உப்புகள் போன்றவை வியர்வை சுரப்பிகள் வழியாக வெளியேறும். இது உடல்வெப்பத்தை சமநிலைப்படுத்தும். கண்ணீரிலும் சோடியம் குளோரை உப்பு உள்ளது. எனவே கண்ணீர், வியர்வை இரண்டுமே உப்புக் கரிக்கிறது.
                                                                                                                                              இசையென்றால் எல்லா உயிர்களுக்கும் ஒரு கிறக்கம் உண்டு. அது ஏன் தெரியுமா?. இசை உணர்வுப்பூர்வமானது. உடற்செயலியல் முறையில் சொல்வதானால் மனித மூளை வலது அரைக்கோளத்தின் நெற்றிக் கதுப்பில்தான் இசையை உணரும் மையம் உள்ளது. இந்த உணர்வு மையத்தை இசை ஒரு தாளலயத்தில் தூண்டும்போது இசை நம்மால் முழுமையாக உள்வாங்கப்பட்டு கிறங்கச் செய்கிறது. வலது பக்க நெற்றிக்கதுப்பின் வளர்ச்சியால் இசைத்திறனும், படைப்புத்திறனும் அதிகமாகும் என்பது ஆய்ந்தறிந்த உண்மையாகும்.                                                                                    டாக்டர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பது உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை வெளிக்காட்டும் தன்மை நாக்கிற்கு இருக்கிறது என்பதால்தான் டாக்டர்கள் இப்படி செய்கிறார்கள். சில நேரங்களில் நாக்கு சுவை அறிவதில் கோளாறு செய்யும். நாக்கு மாறுபட்டு சுவை அறிவதை `டைஜென்சியா' என்றும், குறைவான சுவை உணர்வதை `ஹைபோஜென்சியா' என்றும் கூறுவர். உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்து குறைவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சலின்போது அதிகமாக துத்தநாகம் இழப்பு ஏற்படுவதால்தான் அப்போது வாய் கசப்பதாக உணர்கிறோம்.                                                                                     
குழந்தைகள் தூங்கும்போது புலம்புவதை அதிகமாக காண முடியும். இது ஏன் தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையமாக மூளையின் முகுளம் பகுதி செயல்படுகிறது. இருந்தாலும் தலாமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு, மூளைத்தண்டுப் பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில் உணர்வு நரம்பின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும் புலம்புவதும் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளிடம் ஆழ்ந்த தூக்க வகை காணப்படுவதால் அவர்களே அதிகம் புலம்புகிறார்கள்.
                                                                                                                               பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஸ்டைலுக்காக அல்ல. சூரிய ஒளி பனிக்கட்டிகளின் மேல்பட்டு பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பின் ஒளி கண்ணை பாதித்து பார்வைத்திறனை குறைக்கச் செய்யும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் பனிச்சறுக்கு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிகிறார்கள்.

கோடை காலங்களில் உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே ஆபத்து இருக்கிறது. அவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டால் பார்வைத்திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

Close Menu