வாழ்க்கையைக் கற்றுத் தரும் பொன்மொழிகள்

வாழ்க்கையை அனுபவித்து சில தத்துவ ஞானிகள் தெரிவித்த பொன்மொழிகள், நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தரும் பாடங்களாக அமைகின்றன.

அந்த காலத்தில் நமது முன்னோர்கள் உணர்ந்து கூறிய பழமொழிகளும், இவைகளும் ஒன்றுதான்.

எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம், ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.

உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்சாண்டர்

நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது - விவேகானந்தர்.

எவரும் வேண்டும் என்றே தவறு செய்வதில்லை. எது உண்மையிலேயே சரி என்பதை அறியாது அவர் மனம் கருதுவதைச் செய்கிறார் - சாக்கரட்டீஸ்

என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - கார்ல் மார்க்ஸ்

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது - நெப்போலியன்
Close Menu