மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்


ஆன்மிகத்தின் அடிப்படை
* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமைவேண்டும்.
*
 நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாகஅறிவார்.
*
 நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்லநண்பனாக இரு.
*
 உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான்பலவீனம்.
*
 தொண்டு தான் உண்மையான அன்பைவெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால்பயனில்லை.
*
 பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.
*
 ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.
*
 மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்கமறுப்பதில்லை.
*
 உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.
*
 தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
"அவன்' பார்த்துக் கொள்வான்
* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.
*
 தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.
*
 பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்கவேண்டும்.
*
 உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.
*
 நல்ல நண்பனைப் பெற விரும்பினால், நீங்களும் நல்ல நண்பனாக இருக்கப்பழகுங்கள்.
*
 நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்து விடும்.
*
 இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால், நாளைய பொழுதைக் கடவுள்பார்த்துக் கொள்வார்.
*
 இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தை கடவுள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.
*
 எவ்வளவு குழப்பம் நேர்ந்தாலும், பொய் ஒருநாள் காணாமல் போகும். உண்மையோஎன்றென்றும் நிலைத்து நிற்கும்.
விவேகத்தால் சாதிக்கலாம்
* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கைஅல்ல.
*
 பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.
*
 நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.
*
 தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.
*
 நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் எனஉறுதியாக நம்புங்கள்.
*
 வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது. விவேகமானவனோ வாழ்வில் நிறையசாதிப்பான்.
*
 தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன.நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.
*
 பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும்நஞ்சு போன்றது.
*
 பாவத்தை வெறுக்கலாம். பாவியை வெறுக்காதீர்.
*
 வாழ்நாள் முழுவதும் பழகி வந்த பழக்கத்தை நொடியில் விட்டு விட முடியாது.
தியாக மனம் வேண்டும்
* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.
*
 கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.
*
 தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான்.
*
 கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெறமுடியும்.
*
 பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது.
*
 பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேடநேரம் இருக்காது.
*
 மனிதனின் இதயத்தில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்வதேகலை.
*
 கலைஞர்கள் அவரவர்க்குரிய கலைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்தமுயலவேண்டும்.
*
 மனிதர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதே உண்மையான கல்வியின் பயன்.
*
 ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனைஇழிவுபடுத்துவதில்லை.
நாளை அவன் கையில்!
* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பதுகூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.
*
 உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.
*
 உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள்.கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள்.
*
 இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள்பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.
*
 என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள்மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும்.
*
 நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதைஉணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்
அச்சத்தை அறவே தவிர்!
* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்றசேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.
*
 தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.
*
 உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.
*
 உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில்பலவீனமாகும்.
*
 இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள்பார்த்துக் கொள்வார்.
*
 நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.
*
 நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம்உணர வேண்டும்.
*
 ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச்சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.
*
 அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
சிறந்த வழிபாடு எது?
* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின்நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.
*
 வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.
*
 மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பதுஉடல்நலனுக்கு தேவையானது.
*
 இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத்தோடு செயலாற்றுவதே வைராக்கியவாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்லவிஷயங்களில் மட்டுமேஈடுபடுதல் வேண்டும்.
*
 பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்குஉடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.
*
 ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறுகிடையாது.
*
 ஆழ்ந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. வழிபாட்டின் திறவுகோலாகபிரார்த்தனை அமைந்துள்ளது
அன்பு தோற்பதில்லை
* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்குஅவசியமான பழக்கம்.
*
 அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும்நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும்.
*
 சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடைபயில வேண்டும்.
*
 நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.
*
 அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்குஅழைத்துச் சென்று விடும்.
*
 கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கிகுவிக்கச் செய்ய முடியும்.
*
 கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறியமுடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.
*
 அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம்மனபலவீனமே ஆகும்.
சவால்களை சந்தியுங்கள்
* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்டகருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை.
*
 கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.
*
 கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால்,அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.
*
 கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீகஉணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.
*
 தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிகதீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.
*
 குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமேமிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது
மனம் சுத்தமாக இருக்கட்டும்!
* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனைசெய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.
*
 கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டுநெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.
*
 வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்துஉயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.
*
 பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும்இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும்.
*
 யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதேஉண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தைவீணடிப்பதாகும்.
*
 மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையைஅவசியம் கேட்பான்.
*
 மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையானவழிபாடாகும்.
காந்திஜி 

Close Menu